×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: அசாதுதின் ஓவைசி வலியுறுத்தல்

ஐதராபாத்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஜெகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், தேசிய குடியுரிமை பதிவேடு ( என்.ஆர்.சி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கும் பரவலாக எதிர்ப்புகள் எழுந்துள்ளன.  கேரளா, மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த நிலையில்,  சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்க வேண்டும் என்று ஐதராபாத் எம்.பியும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதின் ஓவைசி வலியுறுத்தியுள்ளார்.  

விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஓவைசி கூறியதாவது ;-  இந்திய ஜனநாயகத்தின்  ஆன்மாவுக்கு எதிராக  சிஏஏ, என்.ஆர்.சி, என்பிஆர் ஆகியவை உள்ளதால்  ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்” என்றார்.  மேலும், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு நான் எதிரானவன் இல்லை எனவும் ஓவைசி  தெரிவித்தார்.


Tags : Citizenship Amendment Act: Asaduddin Owaisi Jagan Mohan Reddy ,Citizenship Amendment Act: Asaduddin Owaisi , Jagan Mohan Reddy, oppose,Citizenship Amendment Act,Asaduddin Owaisi
× RELATED மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து: 4 பேர் பலி