×

மதுரையில் இருந்து சீனா செல்லும் கொரோனா  தடுப்பு மருத்துவ உடைகள்

திருப்பரங்குன்றம்: வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் மருத்துவ உடைகள், மதுரை திருநகரில் தயாரிக்கப்பட்டு சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மதுரை, திருநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நோய் கிருமிகள் தாக்காதவாறும், தொற்றாதவாறும் உடைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை கூடங்களில் டாக்டர் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தக்கூடிய உடைகள் புதுப்புது வைரஸ் கிருமிகள் தாக்காதவாறு தயாரிக்கப்படுகிறது.

இதற்காக இங்கு தயாரிக்கப்படும் உடைகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் கொண்டு முற்றிலுமாக கிருமிகள் அழிக்கப்பட்டும், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் மருந்து பொருட்களினாலும், உடைகளில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டும் அதன் பின்னர் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் மருத்துவ உடைகள் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த உடைகள் கொரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் என கூறப்படுகிறது.

Tags : China ,Corona ,Madurai , Madurai, China, Corona, preventive medical wear
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...