×

கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு எதிரான கடிதத்தால் பரபரப்பு: பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை!

கர்நாடகா: கர்நாடகாவில் பாரதிய ஜனதா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசியமாக கூடி ஆலோசனை நடத்தியிருப்பதால் எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அண்மையில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த 10க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் பெங்களூருவில் மாநில அமைச்சர் ஜெகதீஸ் செட்டாரின் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவி கொடுத்து தீவிர அரசியலில் இருந்து விளக்கி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கடிதம் ஒன்று பரவி கர்நாடகா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அங்குள்ளவர் தெரிவித்ததாவது, தான் அந்த கடிதத்தை பார்த்ததாகவும், அது முற்றிலும் போலியான கடிதம் எனவும் கூறினார். மேலும் எடியூரப்பா நம்முடைய லிங்காயத்து சமுதாயத்தை வெளியே விடாதவர்.

அவர், வீரகேச சமாஜத்தின் தலைவர் மட்டுமல்ல, கர்நாடகத்தின் முதலமைச்சர் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து, அனைத்து சமுதாயத்தினருக்கும் தலைவர் அவர் எனவும் தெரிவித்தார். கர்நாடக பாரதிய ஜனதாவில் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திராவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாரதிய ஜனதா மேலிடத்தில் இருந்து எடியூரப்பாவும், அதிருப்தி தரப்பினரும் இதுகுறித்து ஒருவரின் மீது ஒருவர் புகார் அளித்து உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். எம்.எல்.ஏக்களை இழுத்து குமாரசாமி அரசை கவிழ்த்த பாரதிய ஜனதா தற்போது, அதே நபர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.


Tags : BJP ,MLAs Confidential Advocate Against Yeddyurappa BJP , Karnataka, Yeddyurappa, Kadam, BJP dissident MLAs, Advice
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...