×

பலாத்காரத்தால் 4 மாத கர்ப்பம் மாற்றுத் திறனாளி பெண்ணின் கருவை கலைக்க முடியுமா?: டீன் அறிக்கையளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பலாத்காரத்தால் கர்ப்பமான மாற்றுத்திறனாளி பெண்ணின் கருவை கலைப்பது குறித்து, டீன் அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தர விட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எனக்கு 17 வயதில் மனநலம் பாதித்த, மாற்றுத்திறனாளியான மகள் உள்ளார். நான் கூலி வேலைக்கு வெளியில் சென்ற நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரரால் எனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  கருவை கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் செல்வாக்கு மிக்கவர்கள்.

அவர்களால் எங்கள் குடும்பத்திற்கு ஆபத்து நேரலாம். எனவே, என் மகள் வயிற்றில் வளரும் கருவை கலைக்கவும், தேவையான சிகிச்சை அளிக்கவும், எங்கள் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.மனுவை நேற்று விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன், மனுதாரரின் மகளை பரிசோதித்து கருவை கலைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Tags : teen ,fetus ,force ,Can , pregnancy, force,alternative, Icort directive ,report teen
× RELATED ராஜஸ்தானில் விமானப்படை விமானம் விபத்து..!!