×

ஆவடி அருகே இரண்டு குழந்தைகளுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை : குடும்ப தகராறால் சோக சம்பவம்

சென்னை: குடும்பத் தகராறு காரணமாக இரு குழந்தைகளுடன் இளம்பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது, ஆவடி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அருகே சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்தவர் முத்துமாரி. வேன் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி (23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு கலாசரன் (3), நிஷாந்த் (1) ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தனர். தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதையடுத்து முத்துமாரி, விஜயலட்சுமியை அடிக்கடி அடித்து உதைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவும் தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், முத்துமாரி, விஜயலட்சுமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த விஜயலட்சுமி, இரு குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இரவு வீடு திரும்பாததால் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகளை உறவினர்கள் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தேடி உள்ளனர். இருந்த போதிலும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நேற்று காலை  8 மணிக்கு ஆவடி அருகே இந்துக்கல்லூரி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் தண்டவாளத்தில் விஜயலட்சுமியும், இரு குழந்தைகளும் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு எஸ்.ஐ சந்தானகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
புகாரின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே டிஎஸ்பி முருகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், குடும்பத் தகராறில் விஜயலட்சுமி குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். விஜயலட்சுமிக்கு திருமணமாகி  5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், திருவள்ளூர் ஆர்டிஓ விசாரணை நடக்கிறது.

Tags : suicide ,Avadi Mother ,Avadi , Mother commits suicide , two children ,Avadi
× RELATED திருப்பூரில் தாய், தாத்தா இறந்ததை நேரில் பார்த்த சிறுவன் தற்கொலை