×

துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் கிறிஸ்டினா முன்னேற்றம்

துபாய்: துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கிறிஸ்டினா மிளாடெனோவிச் தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் பெலாரசின் அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சுடன் நேற்று மோதிய கிறிஸ்டினா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 32 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் எலினா ஸ்விடோலினா (உக்ரைன், 3வது ரேங்க்) 2-6, 1-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெரிமி பிராடியிடம் (54வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்தார். நடப்பு சாம்பியன் பெலிண்டா பென்சிக் (சுவிஸ், 4வது ரேங்க்) 6-1, 1-6, 1-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவிடம் (31வது ரேங்க்) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

Tags : Dubai Duty Free , Dubai Duty Free Dennis ,Christina Progress
× RELATED துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் ஜோகோவிச் அசத்தல்