×

விமான நிலையத்தில் கஞ்சாவுடன் சுங்க அதிகாரி கைது

திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் கஞ்சா கொண்டு சென்ற சுங்க இலாகா அதிகாரி கைது செய்யப்பட்டார். கேரள  மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயலால். கொச்சி துறைமுகத்தில் சுங்க  இலாகா அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் ஜெயலால் டெல்லி செல்ல கொச்சி  விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் வழக்கமான  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஜெயலால் வைத்திருந்த பையில் 2  பொட்டலங்களில் 5 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  விமான நிலைய அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு அவரை  கொச்சி போலீசில் ஒப்படைத்தனர்.அவர்கள் ஜெயலாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Customs officer ,airport Customs officer , Airport, Ganja, customs official arrested
× RELATED ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய 2 பேர் கைது