×

எண்ணெய், எரிவாயு ஆய்வுக்காக தோண்டிய கிணறுகளை மூடவேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கென்று தோண்டப்பட்ட கிணறுகள் மூடப்பட்டு, விவசாயம்  செய்ய ஏற்ற வகையில் நிலம் திருத்தம் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.  இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை பிரதானமான பயிர்களாகும். ஏற்கனவே விவசாயத்தில் இயந்திர பயன்பாடு அதிகரித்து விவசாய தொழிலாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாற்று விடுவது முதல் அறுவடை முடிந்து வைக்கோல் வண்டியில் ஏற்றப்படும் வரை அனைத்திற்கும் இயந்திரம் என்றாகிவிட்டது. இதனால், விவசாய தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் சென்று கொண்டுள்ளனர்.

எனவே, இந்த சட்டத்தில் நிலம் பாதுகாப்பு, பாசன உத்தரவாதம், மின்சார உத்தரவாதம், நீர் நிலைகளை பாதுகாப்பது, பராமரிப்பது, ஆறுகள், வாய்க்கால்களை மேம்படுத்துவது போன்ற பரந்து விரிந்த தொலைநோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இச்சட்டம் இருக்க வேண்டும்.எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கென்று தோண்டப்பட்ட கிணறுகள் மூடப்பட்டு விவசாயம் செய்ய ஏற்ற வகையில் நிலம் திருத்தம் செய்து விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். குழாய்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும். எண்ணெய், எரிவாயு பணிக்கென நிறுத்தப்பட்டுள்ள இயந்திரங்கள் வெளியேற்றப்பட வேண்டும். ஏற்கனவே ரசாயன மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Closure ,Farmers' Association ,Closure: Farmers' Association , Oil and Gas Research, Farmers' Association
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு