×

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிறைகளில் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் திரும்ப ஒப்படைப்பு: கூடுதலாக ஜெயிலர் நியமித்து உத்தரவு

வேலூர்: தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மத்திய, மாவட்ட சிறைகளில் கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களுக்கு பதிலாக கூடுதலாக ஜெயிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மத்திய சிறை, பெண்களுக்கான 5 தனிச்சிறை, 9 மாவட்ட சிறை, 88  ஆண்களுக்கான கிளை சிறை, 8 பெண்கள் கிளை சிறை, ஆண்களுக்கான 2 தனி கிளை சிறை, 12 பார்ஸ்டல் பள்ளி, 3 திறந்தவெளி சிறை என மொத்தம் 138 சிறைகள் இருக்கிறது. இவற்றில் 22,332 கைதிகளை அடைக்க  இடவசதி உள்ளது. சிறைகளில் பாதுகாப்பு பணிக்காக சிறை காவலர், ஜெயிலர், கூடுதல் கண்காணிப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 23 கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் கடந்த ஓராண்டுக்கு மேலாக காலியாக இருந்தது.

இந்நிலையில், கூடுதல் கண்காணிப்பாளர் இடத்தை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிரப்பாமல் ஒப்படைக்க வேண்டும் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அந்த பணியிடங்களுக்கு பதிலாக ஜெயிலரை கூடுதலாக நியமித்து சிறை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கூடுதல் கண்காணிப்பாளர் பணியிடங்கள் இல்லை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் சிறைகளில் ஊழல், முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளது. முன்பு ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஜெயிலர்கள் படிப்படியான பதவி உயர்வு மூலம் கூடுதல் கண்காணிப்பாளர் வரை நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போதைய நடைமுறையில் ஜெயிலர்களுக்கு பதவி உயர்வு என்பது கனவாகி போய்விட்டது. இந்த நடைமுறையை சிறை நிர்வாகம் திரும்ப பெற வேண்டும். மேலும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : Superintendent of Courts ,Tamil Nadu ,Prison , Tamil Nadu, prisons, jailer
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...