×

விஷவாயு தாக்கி 14 பேர் பலி பாக்.கில் மர்மம்

கராச்சி:  பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் உள்ள கீயாமாரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு திடீரென விஷவாயு கசிந்தது. இதனால், பொதுமக்கள் மூச்சுவிட முடியாமல் திணறினர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால், கடந்த 2 நாட்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும், 12 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விஷவாயு எங்கிருந்து கசிந்தது என்பது மர்மமாக உள்ளது. எனினும் கராச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருந்த சோயா பீன்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் விஷவாயு உருவாகி, கசிந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Tags : deaths ,death ,poison gas attackers ,poison gas attack , Poison gas, 14 killed, Pakistan
× RELATED வடசென்னை பகுதியில் கொரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு: மக்கள் அச்சம்