×

மாதவிலக்கின் போது சமைக்கும் பெண்களின் மறுபிறவி என்ன? மத தலைவர் சர்ச்சை பேச்சு

அகமதாபாத்:  ‘மாத விலக்கான பெண்கள் கணவருக்கு சமைத்து கொடுத்தால் அடுத்த பிறவியில் கண்டிப்பாக நாயாகத்தான் பிறப்பார்கள்,’ என மத தலைவர் ஒருவர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.  குஜராத் மாநிலம், கட்ச்சில் உள்ள புஜ் நகரத்தில் சுவாமி நாராயணசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் அறக்கட்டளைக்கு சொந்தமாக கல்லூரி ஒன்று உள்ளது. இதில், படிக்கும் மாணவிகளுக்கு விடுதி இயங்கி வருகிறது. மாதவிலக்கான மாணவிகள், இதர மாணவிகளுடன் சேர்ந்து உணவருந்த க்கூடாது என்ற விதிமுறை இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபத்தில், இந்த விதிமுறையை மீறி சில மாணவிகள் நடந்து கொண்டதாக  கூறப்படுகிறது. இதை கண்டறிவதற்காக அங்கு தங்கியுள்ள 60 மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து பெண் ஊழியர் சோதனை நடத்தியுள்ளார். கடந்த 11ம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில், விடுதி ஒருங்கிணைப்பாளர், கண்காணிப்பாளர், மற்றும் உதவியாளரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இந்நிலையில், சுவாமி நாராயணசாமி கோயிலில் இருக்கும் மதத் தலைவர் கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜீ தனது பிரசங்கத்தில், சர்ச்சைக்குரிய கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.  இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தனது பிரசங்கத்தில், ‘மாத விலக்கான பெண்கள் சமைக்கக் கூடாது. மாதவிலக்கான பெண்கள் தங்கள் கணவருக்காக சமைத்து கொடுத்தால், அவர்கள் அடுத்த பிறவியில் நாயாக பிறப்பார்கள். அதேபோல், மாத விலக்கான பெண்கள் சமைக்கும் உணவை சாப்பிடும் ஆண்கள் எருதுவாக பிறப்பார்கள். என்னுடைய கருத்தை நீங்கள் ஏற்காவிட்டால் அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், இவை அனைத்தும் நமது சாஸ்திரங்களில் எழுதப்பட்டுள்ளது. எனவே, ஆண்கள் சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்,’ என்று கூறியுள்ளார். ஆனால், இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என தெரியவில்ைல.

Tags : rebirth ,women ,menstruation , Women, Reincarnation, Religious Leader
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது