×

சீர்காழி அருகே கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் குளத்தில் வீசப்பட்டதா?... மின் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றி தேடும் பணி தீவிரம்

சீர்காழி: சீர்காழி அருகே முருகன் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட ₹1 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கோயில் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகத்தில் கிராம மக்கள் குளத்தில் உள்ள நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கொண்டல் கிராமம். இங்கு பழமைவாய்ந்த குமார சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறை அருகே உற்சவர்களான முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோயில் பூட்டை கள்ளசாவி போட்டு திறந்து உற்சவர் ஐம்பொன் சிலைகள் மூன்றையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ₹1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களையும், சிலைகளையும் தேடி வருகின்றனர். சிலைகளை திருட்டில் ஈடுபடுவோர், போலீசில் சிக்காமல் இருக்க அருகில்  உள்ள குளம், கிணறுகளில் போட்டுவிட்டு பரபரப்பு அடங்கிய பின்னர் சிலைகளை எடுத்துச்செல்வார்கள் என்பதால், அதுபோல் இந்த சிலைகளும் கோயில் குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள், போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பிய கோயிலில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள  சரவண பொய்கை குளத்தில் 3 மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நேற்று மதியம் துவங்கியது. 2வது நாளாக இன்றும் நீர் இறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கும்பகோணம் சிலை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா கோயிலில் நேற்று ஆய்வு செய்து, ஊழியர்களிடம் விசாரித்தார். தொடர்ந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags : Sirkazhi ,pond ,temple , Corpse, robbery, 3 iambon statue
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்