×

ஆபத்தான நிலையில் அங்கன்வாடி மையம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே இடியும் நிலையிலுள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காப்பாரப்பட்டியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு உதிர்ந்து சேதமடைந்துள்ளது.

அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருவதால் குழந்தைகள், ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த அங்கன்வாடி மையத்திற்கு மாற்றாக புதிய அங்கன்வாடி மையம் கட்டுமான பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை துரிதப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Anganwadi Center ,Singambunari , Singambunari, Anganwadi Center
× RELATED அங்கன்வாடி மையத்தில் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது