காட்சி பொருளான மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டி: மயானத்தின் சுற்றுச்சுவர் சேதம்

ஸ்ரீமுஷ்ணம்:  ஸ்ரீமுஷ்ணம் அருகே கொக்கரசன்பேட்டை ஊராட்சியில் கொ.ஆத்தூர், கொக்கரசன்பேட்டை இடையே மகாத்மாகாந்தி, ஊரக வேலை உறுதிதிட்டம் மாவட்ட ஊரக முகமை மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டது. இது பயன்பாட்டிற்கு வராமல் மேற்கூரை சரிந்து அரசு பணம் விரையமாகியுள்ளது. பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள இந்த மண்புழு உரம் தயாரிக்கும் கட்டிடம் செயல்படாமல் காட்சிபொருளாக உள்ளது.

இந்த சாலை ஓரம் இறந்தோரின் சடலத்தை எரிக்கும் போது வெளியாகும் புகை சாலையில் செல்வோருக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு மயானத்தின் பக்கவாட்டில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. இது தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் சடலம் எரிக்கும் போது சாலை வழியே செல்பவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அரசு மயானத்தின் சுற்றுசுவரை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>