×

மணமேல்குடி கால்வாயில் கொட்டி கிடக்கும் குப்பையால் தண்ணீர் தேக்கம், சுகாதார சீர்கேடு அபாயம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

மணமேல்குடி: மணமேல்குடி கால்வாயில் கொட்டி கிடக்கும் குப்பையால் தண்ணீர் வெமணமேல்குடிகிழக்குகடற்கரைசாலையின் நடுவேசெல்லும் அருணாசலகாவேரிகால்வாயில் 200க்கும் மேற்பட்டபிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகள் அடைப்பால் தண்ணீர் தேங்கி அசுத்தமாகி கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு சுகாதாரகேடு ஏற்படுத்தி வருகின்றது. மணமேல்குடி கிழக்கு கடற்கரைசாலையின் நடுவே அருணாசலகாவேரி எனும் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் இருபுறமும் 6 அடிஉயரத்தில் சுவர் எழுப்பி மூடப்படாமல் உள்ளது. இந்த கால்வாயில் மேற்கே உள்ள 18 கிராமங்களிலிருந்து மழைக்காலங்களில் வயல் மற்றும் கண்மாய்களில் அதிகமானதண்ணீர் சேரும் போது அந்த தண்ணீர் வடிக்கப்படும் போதும் அந்த தண்ணீர் மணமேல்குடிநகரில் உள்ள பெரிய குளங்களான் மஞ்சல் குளம் மற்றும் வண்ணான்குளம் ஆகியவைகளில் நிரம்பி பின்னர் அதிகமான தண்ணீர் இந்த கால்வாய் மூலம் கிழக்கே உள்ள கடலுக்கு செல்கின்றது.

இந்த கால்வாய் இல்லையென்றால் மழைக்காலங்களில் மணமேல்குடி நகரமே தண்ணீரில் தத்தளிக்கும் சூழ்நிலைஉள்ளதால் இந்த அருணாசல காவேரி கால்வாய் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தகால்வாயில் கழிவுநீர் கலந்து கால்வாயில் குப்பைகளும் பிளாஸ்டிக் பைகள் 200க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள்,மது பாட்டில்கள் மலைபோல் குவிந்துகிடப்பதால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிறம் மாறிகொசுக்கள் உற்பத்தியாகிஅருகில்குடியிருப்போருக்குஉடம்பு மூழுவதும் கொசுக்கடியால் தடிப்பு அரிப்புகாய்ச்சல் போன்றசுகாதாரகேடுஆகியவை ஏற்படுகிறது. சுகாதாரதுறையினர் இந்த கால்வாயில் மருந்தும் ஊற்றுவதில்லைஎன்றும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர் மேலும் இந்தகால்வாய் மூடப்படாததால் இதன் ஓரத்தில் நடந்து செல்வோர் தடுமாறிவிழும் நிலை ஏற்படுகிறது. மேலும் ஆடு, மாடு,நாய் உள்ளிட்டவைகள் இந்த கால்வாயில் அடிக்கடிவிழுந்தும் வருகிறது. எனவே கால்வாயில் உள்ளபாட்டில் மற்றும் குப்பைகளைஅகற்றிசுத்தம் செய்துதண்ணீர் தேங்காமல் செல்லவும் இனிமேல் குப்பைகள் சேராமல் இருக்க சிலாப் போடவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : canal ,Manamelgudi , Manamalgudi, canal, spill of garbage, water stagnation
× RELATED கீழ்பவானியில் தண்ணீர் எடுத்த லாரி பறிமுதல்