4 டிஜிபிக்கள் வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த நிலையில், தமிழகத்தில் 43 போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க மத்திய அமைச்சகம் அனுமதி

டெல்லி : 2020-21ம் ஆண்டுக்கான தமிழகத்தில் 43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பான பரிந்துரைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதன் படி தமிழகத்தில் 43 போலீஸ் அதிகாரிகளுக்கு டிஐஜி உள்ளிட்ட பதவி உயர்வு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம்  நான்கு டிஜிபிக்கள் வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 3 டிஜிபிக்கு மட்டுமேஅனுமதியளித்துள்ளது. விதிமுறைகளின்படி 3 டி.ஜி.பி.க்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி மற்றும் டிஐஜி ஆகிய பதவிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெறும் போதும் பதவி உயர்வு அளிக்கப்படும் போதும் காலி பணியிடங்கள் உருவாகின்றன.இவற்றை நிரப்புவதற்காக 43 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற அனுப்பி இருந்தது. இந்த 43 அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக தலைமை செயலகத்தில் உள்துறை செயலர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் குழு கூட்டத்திலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு அனுமதி கேட்டு இருந்தது.ஆனால் 3 பேருக்கு மட்டுமே டிஜிபிக்களாக பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வுக்கான குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

Related Stories: