×

மகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்‌ஷா ஓட்டுநரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி

உத்தரபிரதேசம்: தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணம் மேற்கொண்டார். அப்போது மகள் திருணமத்துக்கு அழைப்பிதழ் அனுப்பிய ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத் என்பவரைச் சந்தித்தது நெகிழ்ச்சி மிகு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

மங்கள் கேவத்தை நேரில் சந்தித்த பிரதமர் மோடி அவரது ஆரோக்கியம், குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்தார். தூய்மை இந்தியா இயக்கத்துக்காக ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத்தின் பங்களிப்புக்காக பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மோடியின் தூய்மை இந்தியா இயக்கத்தினால் அகத்தூண்டுதல் பெற்ற மங்கள் கேவத் தன் கிராமத்தில் கங்கை ஆற்றுக் கரையைத் தானே சுத்தப்படுத்தும் பணியில் இறங்கினார்.

மகள் திருமணத்துக்கு பிரதமர் மோடி வராவிட்டாலும் வாழ்த்துச் செய்தி அனுப்பியது தனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது என்று கூறிய மங்கள் கேவத் பிரதமர் அலுவலகத்தில் நானே சென்று மகள் திருமண அழைப்பிதழை கொடுத்தேன். பிப்.8ம் தேதி பிரதமரிடமிருந்து வாழ்த்துச் செய்தி எங்களுக்குக் கிடைத்தது. பிரதமரின் வாழ்த்துச் செய்தி எங்கள் குடும்பத்திற்கு உற்சாகமளித்தது என  ரிக்‌ஷா ஓட்டுநர் மங்கள் கேவத் கூறினார்.


Tags : Narendra Modi ,rickshaw driver , Daughter married, invited, rickshaw driver, meet and greet, PM Narendra Modi
× RELATED கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன்...