×

அதிமுக ஆட்சியை குறைகூறியவர் இன்று பாராட்டுகிறார்: ராஜன் செல்லப்பா பேச்சுக்கு திமுக பதிலடி

மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா (அதிமுக) :  அதிமுக ஆட்சியில் 4.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் 100 மடங்கு வளர்ச்சி திட்டங்கள் வந்துள்ளது. 10 மடங்கு வளர்ச்சியில் 3 மடங்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது அவ்வளவு தான். இதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. ஒட்டன்சத்திரம் சக்கரபாணி (திமுக கொறடா): இந்த ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்று அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டியளித்திருப்பது பத்திரிகைகளில் செய்தியாக வந்துள்ளது. ஆனால் இன்று ஆட்சி நிர்வாகம் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். ராஜன் செல்லப்பா: இந்த ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்று ஒருபோதும் நான் கூறியதில்லை. இந்த ஆட்சியில் அதிகாரிகள் செய்யும் குறைகளை தான் சொல்லியிருந்தேன். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சி நிர்வாகத்தை ஒருபோதும் குறை சொல்லவில்லை.  இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

Tags : Critic ,AIADMK ,DMK ,Rajan , Prime Minister, Rajan Chellappa, DMK
× RELATED அதிமுக ஆட்சியா, சட்டத்தை கையில்...