×

நடிகை அமலாபால் கொடுத்த புகாரில் 2 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபர் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிலதிபர் அழகேசன் என்பவர், தன்னிடம் ஆபாசமாக பேசியதாக, நடிகை அமலா பால், கடந்த ஆண்டு சென்னை  மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அழகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும், தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், அவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், நடிகை அமலாபால் அளித்த  பொய் புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கின் விசாரணைக்கு  இடைக்கால தடை விதித்தும், இந்த மனுவுக்கு போலீசார் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : SC ,actress ,Amlapal Actress Amalapal ,High Court ,trial , Actress Amalapal, 2 others, case, trial, ban, High Court, order
× RELATED பெரம்பலூரில் பாஜ எம்பியை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்