×

2,500 கோடி மட்டும் கட்டுவதா? வோடபோன் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி: ஏர்டெல் 10,000 கோடி செலுத்தியது

புதுடெல்லி: ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 2,500 கோடி, ஏர்டெல் 10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தியதாக, தொலைத்தொடர்பு துறை தெரிவித்தது. அதேநேரத்தில், தவணை முறையில் ஒரு பகுதி தொகையை மட்டும் செலுத்த அனுமதி கோரிய வோடபோன் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபரில் தள்ளுபடி செய்தது. நிலுவையை வட்டியுடன் சேர்த்து 1.47 லட்சம் கோடியை வரும் ஜனவரி 23ம் தேதிக்குள் மத்திய அரசிடம் செலுத்த கடந்த ஜனவரி 15ல் உத்தரவிட்டது. தொகையை செலுத்த கூடுதல் அவகாசம் கோரிய ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அடுத்த மாதம் 17ம் தேதிக்குள் முழு தொகையையும் நிறுவனங்கள் செலுத்த உத்தரவிட்டது.

 நேற்று, ஏஜிஆர் கட்டண பாக்கியில் ஒரு பகுதியாக வோடபோன் ஐடியா 2,500 கோடி, ஏர்டெல்  10,000 கோடி, டாடா குழுமம் 2,190 கோடி செலுத்தியதாக, தொலைத்தொடர்பு துறை  தெரிவித்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வோடபோன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘‘வோடபோன் நிறுவனம் இன்று (திங்கட்கிழமை) ₹2,500 கோடி செலுத்துவதாகவும், மேலும் ₹1,000 கோடியை வரும் வெள்ளிக்கிழமை செலுத்துவதாகவும் கூறி, நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால், இவரது கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.

Tags : Vodafone ,Supreme Court ,Airtel ,Vodafone Request Supreme Court , Vodafone, Request, Supreme Court , Airtel
× RELATED நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும்...