×

ஆஸ்திரேலியாவுக்கு கூரியர் மூலம் கடத்த முயன்ற 3.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்: சிகை அலங்கார பொருள் பெயரில் பதிவானது அம்பலம்

சென்னை: சென்னையில் இருந்து கூரியர் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற 3.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். போலியான முகவரியில் இதை அனுப்பிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து பெருமளவு போதைப்பொருள் ஆஸ்திரேலியாவுக்கு கூரியர் மூலம் விமானத்தில் கடத்தப்பட உள்ளதாக, சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கைக்கு செல்லும் பயணிகள் விமானங்களையும், சரக்கு பார்சல்களையும், சரக்கு விமானங்களையும் கூரியர் நிறுவனங்களையும் தீவிரமாக கண்காணித்தனர். சுங்க அதிகாரிகள் சென்னை விமான நிலையம் பகுதி, கிண்டி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தின் பார்சலை சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை சென்னை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கூரியர் நிறுவத்தில் நுழைந்து, அங்கிருந்த பார்சலை ஆய்வு செய்தனர்.

அதில், ஒரு பார்சல் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப நேற்று முன்தினம் மாலை பதிவு செய்யப்பட்டு இருந்தது. சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலை பிரித்து ஆய்வு செய்தனர். அதில் சிகை அலங்கார பொருட்கள், ரிப்பன்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பார்சலில் இருந்த முகவரி, தொலைபேசி எண்ணை ஆய்வு செய்தபோது போலி என்று தெரியவந்தது. சுங்க அதிகாரிகள் அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, 57 சிறு பவுச்சு இருந்தன. அதை பிரித்து பார்த்தில் மெட்டோ குயிலேன் என்ற போதைப் பொருள் இருந்தது. அதன் எடை 6.315 கிலோ. அதன்மதிப்பு ₹3.5 கோடி. இதுபற்றி கூரியர் நிறுவனத்தில் சுங்க அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது கூரியர் நேற்று முன்தினம் இரவு பதிவு செய்தது தெரியவந்தது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான ஆசாமிகளின் உருவங்களை வைத்து சுங்க அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை சென்னை அண்ணாநகரில் உள்ள மத்திய போதை தடுப்புப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கொரியர் மூலம் கடத்த முயன்ற  ₹3.5 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில், அந்த பார்சலை பிரித்து ஆய்வு செய்தனர். அதில் சிகை அலங்கார பொருட்கள், ரிப்பன்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


Tags : Australia ,hairdresser , 3.5 crore, drug, Australia ,hairdresser
× RELATED எலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள்...