×

மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் முத்துகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மகா சிவராத்திரி வரும் 21ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) விழுப்புரம் சார்பில், விழுப்புரம்- மேல்மலையனூர் சென்னை- திருவண்ணாமலை, சென்னை-காளஹாஸ்தி மற்றும் குடியாத்தம்-மொகிலி ஆகிய வழித்தடங்களில் வரும் 21ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்கள் மற்றும்  பொதுமக்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே இந்த சிறப்பு பேருந்து வசதியினை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

Tags : Maha Sivaratri Maha Shivaratri 250 Special Bus Operation , Maha Shivaratri, 250, Special Buses ,Operation
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...