×

காணாமல் போன சிறுவன் கொலையானதாக வதந்தி: போலீசில் தாய் கதறல்

அண்ணாநகர்: வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் அமுல் (32). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சதீஷ் (16), கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து அமுல் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாயமான சிறுவன் சதீஷ், அடித்து கொலை செய்யப்பட்டு, வில்லிவாக்கம் ஆடுதொட்டி முட்புதரில் சடலம் புதைக்கப்பட்டு இருப்பதாக அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதுபற்றி அறிந்த அமுல், உடனடியாக வில்லிவாக்கம் காவல் நிலையம் சென்று, இதுபற்றி கூறி கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, ஆய்வாளர் ரிஜிஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். ஆனால், அங்கு சடலம் புதைத்து இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால், அமுலுக்கு கிடைத்தது போலி தகவல் என தெரியவந்தது.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Mother Cathedral , missing boy, Rumored, murdered, Mother Cathedral
× RELATED வதந்தியை பரப்புவோர்,பொதுசேவைகளை...