வண்ணாரப்பேட்டை தடியடி குறித்து சட்டசபையில் பொய் தகவலை முதல்வர் பதிவு செய்துள்ளார்: அப்துல் ரஹீம் குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொருளாளர் அப்துல் ரஹீம் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபையில் வண்ணாரப்பேட்டை போராட்ட தடியடி குறித்து பொய்யான தகவல்களை முதல்வர் பதிவு செய்துள்ளார். மத்திய அரசு சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போல் தமிழக அரசு செய்கிறது. மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்.

ஆனால் அம்மா அரசு என்று சொல்லிக்கொண்டு இவர்கள் மத்திய அரசு சொல்வதை செய்து கொண்டிருக்கின்றனர். இந்த போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டம் என்று கூறுகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இது அனைவருக்குமான போராட்டம். இதில் இந்துக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். மக்கள் போராட்டம் நடத்தினால் எல்லா வகையிலும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>