×

மகாசிவராத்திரி கோவைக்கு சுற்றுலா ஏற்பாடு

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி ஆதியோகி கோவை ஈஷா மையத்திற்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: சுற்றுலாவை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் ஒருநாள் மகா சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையத்திற்கு புதியதாக சுற்றுலா 21ம் தேதியன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கோவையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஈஷா யோகா மையம் மகா சிவராத்திரி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம் ஆதி யோகி எனப்படும் சிவபெருமான் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன் இந்தியாவிலிருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து, ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

இச்சுற்றுலா 21ம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கோயம்புத்தூர் புறப்பட்டு மறுநாள் இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடையும். இப்பயணத்தில் இரண்டு வேளை காலை உணவு, மதிய உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும். 21ம் தேதியன்று ஈசா யோக மையம் நடத்தும் மகா சிவராத்திரி விழாவில் இரவு கலந்து கொள்வார்கள் பிறகு காலையில் கோயம்புத்தூர் தமிழ்நாடு விடுதியில் காலை புத்துணர்வுக்கு பிறகு கோவையில் இருந்து புறப்பட்டு இரவு 8.30 மணி அளவில் சென்னை வந்தடையும். இச்சுற்றுலாவிற்கு சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்தில் இருந்து சொகுசு பேருந்து இயக்கப்படும். இச்சுற்றுலாவிற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.3900 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாவிற்கு வழிகாட்டி உதவியுடன் குளிர் சாதனப் பேருந்து இயக்கப்படும். மேலும் தொடர்புக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2, தொலைபேசி: 044-25333333, 25333444, 25333857, 25333850-54, கட்டணமில்லா தொலைபேசி: 180042531111, இணையதள முகவரி: www.tamilnadutourism.org, இணையதள முன்பதிவு www.ttdconline.com, செல்ேபான் முன்பதிவு www.mttdonline.com  ஆகும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Coimbatore , Maha Shivaratri, Travel ,Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...