×

போலீசாரின் யூ டர்ன் செயல்பாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட 3 மாணவர்கள் மீண்டும் கைது

ஹுப்பள்ளி: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவர்களை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து யூ டர்ன் அடித்த போலீசார் நேற்று திடீரென 3 பேரையும் மீண்டும் கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்ச் 2ம் தேதி வரை சிறையில் அடைத்தனர். ஹுப்பள்ளி-தார்வாட் நகரில் கே.எல்.இ. பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த அமீர், பாசித் மற்றும் தாவிப் ஆகியோர் படித்து வருகின்றனர்.  புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு கடந்த 14ம் தேதி நாடு முழுவதும் இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன் துக்கநாளாக அனுசரிக்கப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக கே.எல்.இ. பொறியியல் கல்லூரியை சேர்ந்த அந்த 3 மாணவர்களும் மகிழ்ச்சி நாளாக கொண்டாடும் வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியதுடன், புல்வாமா தாக்குதலை வரவேற்பதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையொட்டி 3 மாணவர்களையும் அதிரடியாக கைது செய்த போலீசார் ஜாமீனில் வெளியில் வரமுடியாத வகையில்தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு ெசய்தனர்.

ஆனால், நேற்று முன்தினம் ஹுப்பள்ளி-தார்வாட் மாநகர போலீஸ் ஆணையர் திலீப்பின் உத்தரவின் பேரில் 3 மாணவர்களும் எந்த ஒரு காரணமும் இன்றி விடுவிக்கப்பட்டனர். இதற்கு இந்து அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாஜ தலைவர்கள் மட்டும் இன்றி  முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் 3 மாணவர்களை விடுதலை செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், மாணவர்களை விடுதலை செய்த போலீஸ் ஆணையருக்கு எதிராக போராட்டம் நடத்துவதெனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட 3 மாணவர்களை நேற்று முன்தினம் இரவு போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர், இரவோடு இரவாக ஹுப்பள்ளி-தார்வாட் மாவட்ட 3வது ஜே.எம்.எப்.சி. நீதிமன்ற நீதிபதி ேஜ.புஷ்பா முன்னிலையில் 3 மாணவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், வழக்கம் போல் நடக்கும் விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டு திருப்பி அனுப்பி வைத்தார். இந்நிலையில், நேற்று காலை போலீசார் 3 மாணவர்களை மாவட்ட 3வது ஜே.எம்.எப்.சி. நீதிமன்ற நீதிபதி ஜே.புஷ்பா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 3 பேரையும் மார்ச் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேர் மீது செருப்பு, ஷூ வீசி தாக்குதல் நடத்த முயற்சி:

இதை தொடர்ந்து காஷ்மீரை சேர்ந்த அந்த 3 மாணவர்களையும் போலீசார் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்திருந்தனர். போலீசார் நீதிமன்றத்திலிருந்து மாணவர்களை வெளியில் அழைத்து வந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆவேசம் அடைந்து  3 மாணவர்கள் மீதும் செருப்பு, ஷூக்களை வீசி எறிந்தனர். அதுமட்டும் இன்றி மேலும் பலர் 3 பேரை தாக்கவும் முற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போலீசாருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் வீசிய கற்கள், செருப்பு, ஷூ போன்றவை போலீசார் மீதும் விழுந்தது. இதை பொருட்படுத்தாத போலீசார் மூன்று பேரையும் வேனில் ஏற்றி பத்திரமாக அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு


காஷ்மீர் மாணவர்களின் செயல்பாடு தொடர்பாக ஹுப்பள்ளி-தார்வாட் மாவட்ட வழக்கறிஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எக்காரணத்தைக்கொண்டும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ேகாஷமிட்ட 3 மாணவர்களுக்கு ஆதரவாக யாரும் ஆஜராகக்கூடாது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று 3 மாணவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : U-turn ,Pakistan , U-turn , police,arrested, three students,support of Pakistan
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்