×

கன்னட திரைப்பட பின்னணி பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை: கணவன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு:கன்னட திரைப்படத்தில் பின்னணி பாடகி சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கு  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் இன்ஜினியரான சரத்குமார் என்பவருடன் நடந்தது. இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் சரத் குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு சுஷ்மிதாவை அதிகளவு கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் அவர் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு, சுஷ்மிதா அன்னபூர்னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அங்கு நேற்று தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் என்னுடைய தற்கொலைக்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் கூறி இருந்தார்.   இது குறித்து அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான அவரது கணவர், பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags : Sushmita ,background singer , Kannada film background singer, Sushmita, Suicide, Husband, Accused
× RELATED புழல் கன்னடபாளையம் சுடுகாட்டில்...