×

சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சியில் இந்தியா உறுதி: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ‘‘சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். இடம் பெயரும் உயிரினங்கள், வன விலங்குகளை பாதுகாக்க, ‘சிஎம்எஸ் சிஓபி’ என்ற அமைப்பு உள்ளது. இதில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் 3 ஆண்டுகள் தலைமை வகிக்கும். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த அமைப்புக்கு பிலிப்பைன்ஸ் தலைமை தாங்கியது. இந்த அமைப்பின் 13வது மாநாடு குஜராத்தின் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. இதில் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2023ம் ஆண்டு வரை இந்த அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியிலிருந்து உரையாற்றியதாவது: புவி வெப்பநிலையை 2 டிகிரிக்கும் குறைவாக பராமரிக்க பாரீஸ் ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்தது. அதன்படி செயல்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒருங்கிணைந்த வளர்ச்சி பாதையில் செல்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. சூற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வளர்ச்சியை நாங்கள் உறுதி செய்கிறோம். ‘விருந்தினரை போற்றுவோம்’ என்ற மந்திரத்தை இந்தியா பாரம்பரியமாக பின்பற்றி வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு சிஎம்எஸ் சிஓபி அமைப்புக்கு இந்தியா தலைமை வகிக்கும்.

வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க தேசிய செயல் திட்டத்தை இந்தியா தயார் செய்துள்ளது. நாட்டின் பல பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பிற நாட்டு எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. எனவே, வனவிலங்குகளை பாதுகாப்பதில் ஒத்துழைப்பு தேவை. வனவிலங்குகளையும், உயிரினங்களையும் பாதுகாப்பது, இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி. உலக நிலப்பகுதியில் 2.4% நிலப்பகுதியை கொண்டுள்ள இந்தியாவில், உலகஅளவிலான பல்லுயிர்பெருக்கம் 8% அளவுக்கு உள்ளது என்றார்.

Tags : India ,Modi ,Modi India , India , committed , developing environment, Prime Minister Modi
× RELATED கொரோனாவை சமாளித்து பொருளாதார...