×

பாசமாக வளர்த்து வந்த குரங்குக்கு கோயில் கட்டிய கர்நாடக மாஜி அமைச்சர்: 20 லட்சம் செலவில் கட்டப்பட்டது

மைசூரு: பாசமான குரங்கு இறந்ததை தொடர்ந்து அதன் நினைவாக கர்நாடக முன்னாள் அமைச்சர் ஒருவர் கோயில் கட்டியுள்ளார். கர்நாடகாவின் மைசூரு தட்டகள்ளி கிராமத்தில், அம்மாநில முன்னாள் அமைச்சர் சா.ரா.மகேசுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டத்திலிருந்து பிரிந்து வந்த குட்டி குரங்கு அங்கிருந்த ஆட்டுக்குட்டியுடன் விளையாடிக்கொண்டு இருந்தது. அதைப் பார்த்த சா.ரா.மகேஷ் அந்த குட்டி குரங்கை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். இதனால் சா.ரா.மகேசிடம் குரங்கு ஒட்டிக்கொண்டது. அதை பாசத்துடன் சா.ரா.மகேஷ் வளர்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் சா.ரா.மகேஷ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாடு சென்றார். அந்த நேரத்தில் மின்சாரம் தாக்கி குட்டி குரங்கு உயிரிழந்தது. இதுகுறித்து சா.ரா.மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே சுற்றுலாவை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினார். பாசத்துடன் வளர்த்து வந்த குரங்கு இறந்ததை நினைத்து அவர் கண் கலங்கினார். பின்னர், உயிரிழந்த குட்டி குரங்கை தனது தோட்டத்திலேயே புதைக்க ஏற்பாடு செய்தார். மேலும் அந்த இடத்தில் ஆட்டு குட்டி மீது குரங்கு உட்கார்ந்து இருப்பதை போல சிலை ஒன்றை உருவாக்கினார். அத்துடன் தோட்டத்திலேயே ரூ.20 லட்சம் செலவில் கோயில் ஒன்றை கட்டி அவரே திறந்து வைத்தார்.

Tags : Minister ,Karnataka ,Karnataka Maj , temple , built , minister of Karnataka Maj
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி