×

வீராம்பட்டினம் கடற்கரையில் பாய்மர படகு கட்டுமான பணி தீவிரம்: அரிக்கன்மேடு மாதிரியும் வடிவமைப்பு

புதுச்சேரி: வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பாய்மர படகு கட்டுமான பணி நடந்து வருகிறது. இதுபோல், அரிக்கன்மேடு மாதிரியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வீராம்பட்டினத்தில் அரிக்கன்மேடு காட்சியம் மற்றும் ரோமன் நாட்டு கப்பல் போக்குவரத்தை நினைவுபடுத்தும் வகையில் பாய்மர படகு அமைக்கும் திட்டம் ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணி ஒருசில மாதங்கள் தொய்வு ஏற்பட்டிருந்த நிலையில் மீண்டும் இப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.

70 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட ஒருசில இறுதிகட்ட பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது. வீராம்பட்டினம் கடற்கரை மணலில் புதைந்திருக்கும் வடிவிலான அமைப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பாய்மர படகை தயாரிக்கும் பணியில் பாரதியார் பல்கலைக்கூட உதவி பேராசிரியர் ராஜராஜன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இவ்விடத்தில் பெரிய அளவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் திடல், பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கேயே உணவு தயாரிப்பு கூடமும் உள்ளது.


Tags : Veerapattinam ,beach , Veerampattinam Beach, Sailing Boat Works
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...