×

சென்னை துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது சீன பூனையா?... சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் இருந்தது சீன பூனையா? என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே  உலுக்கி வருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில், கொரோனா வைரஸ்  விலங்குகளில் இருந்தே முதலில் மனிதர்களுக்கு பரவியது கண்டறியப்பட்டது. மேலும் இது  காற்றின் மூலமும் வேகமாக பரவும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், கடந்த 11ம் தேதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்‌ட  சுற்றறிக்கையில், ‘சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை’ என்று தெரிவித்தது.

ஜன. 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில்  தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே  ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடைவிதிக்கப்பட்டது. இந்த  சூழலில் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்த கப்பலில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ‘ஸ்டோவேவே’ பூனை ஒன்று கூண்டில்  அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்  துறைமுகத்தின் நுழைவு வாயில் வழியாக வந்த கண்டெய்னரில் சுங்கத்துறை  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  அப்போது, விளையாட்டு பொம்மைகள் அதிகம்  நிரம்பிய கண்டெய்னரில், கூண்டில் அடைக்கப்பட்ட பூனை   கண்டுபிடிக்கப்பட்டது.

மிகவும் பலவீனமாக இருந்த அந்த பூனைக்கு தற்போது  மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை நடைபெற்று வருகிறது. அந்த பூனையை யார் அனுப்பியது?  யாருக்காக அனுப்பப்பட்டது என்பதை பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை  நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai Harbor ,Chinese , Chennai Harbor, Ship, Chinese Cat
× RELATED சென்னை துறைமுக சிறப்பு...