×

சுகப்பிரசவத்திற்கு அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்: சட்டமன்றத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

சென்னை: தமிழக அரசின், 2020 - 21ம் ஆண்டிற்கான பட்ஜெட், கடந்த 14-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் பன்னீர்செல்வம், கடந்த  14-ம் தேதி அன்று காலை, 10:00 மணிக்கு, பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட்  என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. தொடர்ந்து பட்ஜெட் மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம், காவிரி பகுதி பாதுகாக்கப்பட்ட  வேளாண் மண்டலமாக அறிவிப்பு உள்ளிட்டவை தொடர்பான காரசார விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. சட்டமன்ற தொடங்கிய முதல் காரசார விவாதங்கள் நடைபெற்று  வருகிறது. இந்நிலையில், கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு  பதிலளித்த  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவம் 30 சதவீதமாகவும், தமிழகத்தில் 65  சதவீதமாகவும் உள்ளது என்றார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட அரசு மருத்துவமனைகளில் யோகா பயிற்சி வழங்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் என்று அவர் பெருமிதத்தோடு  தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் பிரசவத்தை கண்காணிக்க குழு ஒன்று செயல்பட்டு வருவதாகவும்  அமைச்சர் தெரிவித்தார். தமிழக அரசின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசும் பின்பற்றி வருவதே தமிழகத்திற்கான பெருமை என்று  விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

Tags : state ,state hospitals ,Minister , Yoga is the only state in the state to offer yoga training in state hospitals: Minister Vijayabaskar proud
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...