×

புர்கா அணிவது குறித்து சர்ச்சை கருத்து: பிரபல எழுத்தாளர் தஸ்லிமாவுக்கு ஏ.ஆர்.கதீஜா இன்ஸ்டாகிராமில் பதிலடி

சென்னை: புர்கா அணிவது தொடர்பாக பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீனுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகளுக்கும் நடைபெற்றுள்ள கருத்து மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா, புர்கா அணிந்தபடி இருக்கும் படம் ஒன்றை தமது ட்விட்டர் பதிவேற்றியிருந்தார். அதில், ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜாவை காற்று புகாத புர்கா உடையில் பார்க்கும்போது தமக்கே மூச்சுத்திணறல் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். கலாச்சார பின்னணியில் உள்ள குடும்பத்தில் நன்கு படித்துள்ள பெண்கள் கூடு எளிதில் மூளைச்சலவை செய்யப்படுவதாக தஸ்லிமா விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தஸ்லிமாவுக்கு தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா, ஒவ்வொரு முறையும் இதுபோன்ற கருத்துகள் தன்னுள் நெருப்பை மூட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். புர்கா அணிவதை பெருமையாக கருதுவதாகவும் கதீஜா தெரிவித்துள்ளார். தாம் புர்கா அணிந்த படத்தை காணும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டால் தஸ்லிமா காற்று இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கதீஜா தெரிவித்துள்ளார். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுளில் தேடுங்கள் என்று கூறியுள்ள கதீஜா, பிற பெண்களை தாழ்த்துவதோ, அல்லது அவர்களது தந்தைக்கு பிரச்சனை ஏற்படுத்துவதோ பெண்ணியம் அல்ல என்று பதிலடி கொடுத்துள்ளார். பொதுவெளியில் தஸ்லிமா நஸ்‌ரீனுக்கும் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜாவுக்கும் இடையே நடைபெற்றுள்ள வாக்குவாதம் சமூகவலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


Tags : Taslima Nasreen ,AR Khadija ,Khatija ,AR Rahman , Writer Taslima, AR Khatija , AR Rahman, burqa
× RELATED காலரா பரவியபோது மாஸ்க், கையுறை...