×

சுற்றுசூழலை பாதிக்கமால் வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவதை இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது : இடம் பெயரும் பறவைகள் குறித்த சர்வதேச மாநாட்டில் மோடி பேச்சு

டெல்லி : மத்திய அரசு நிலைத்த மேம்பாட்டு பாதையில் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்  சுற்றுசூழலை பாதிக்கமால் வளர்ச்சி திட்டங்கள் அமல்படுத்துவதை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறும் வலசை நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகள் தொடர்பான 13வது சர்வதேச மாநாட்டை புதுடெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கிவைத்து அவர் பேசினார். பன்னெடுங்காலமாக வன விலங்குகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது  இந்தியாவின் பண்பாட்டு நெறியாக இருந்து வந்துளளது என்றும் இதனால் கருணை, இணைந்து வாழுதல் போன்றவை ஊக்கப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நீண்ட காலமாக இந்த வகையில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலன் தந்துளளன என்று கூறிய அவர், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் மொத்த வனப்பரப்பு  21.6%உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார். புலிகளின் எண்ணிக்கை 2,970ஆக உயர்ந்துள்ளது என்றும் 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்து சாதனையையும் பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது என்றும் கூறினார். உலக யானைகளில் 60% இந்தியாவில் தான் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.பனி சிறுத்தைகளை பாதுகாப்பதெற்கென திட்டம் ஒன்று தொடங்கப்பட்டு இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். ஆசிய பகுதி சிங்கங்களுக்கென தனி திட்டம் குஜராத்தின் இரு வனப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தற்போது இந்த சிங்கங்களின் எண்ணிக்கை 583 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறினார்.

மத்திய ஆசியாவின் பறவைகள் இடம்பெயர்வு மார்க்கமாக உள்ள இந்தியா இந்த மார்க்கத்தை பாதுகாப்பதற்கான தேசிய செயல் திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 020ம் ஆண்டு கடல் ஆமை கொள்கை வெளியிடப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.பாரீஸ் உடனப்பாட்டின் அம்சங்களை அதிகம் அமல்படுத்தியுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று குறிப்பிட்ட அவர், முக்கிய கவனம் பெரும் உயிரின பாதுகாப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்றார். இந்த வகையில் இந்தியா, ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய உச்சி மாநாட்டு நாடுகளுடன் தமது உறவுகளை வலுப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் மோடி கூறினார். இயற்கையுடன் நல்லிணிக்கமாக வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இந்த மாநாட்டின் சின்னமாக தென்னிந்தியாவின் கோலம் அமைந்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி உரையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Modi ,India ,International Conference ,conference , Environment, Development, Projects, Birds, Gujarat, Modi, Speech
× RELATED இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள்...