×

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகையில் செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கைவிடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரி ஈடு இணையற்ற உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருந்தாலும் அக்கல்லூரியில் வழங்கப்படும் பட்டங்களின் தரம் குறித்து பல்வேறு ஐயங்கள் எழுவதாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலைகளை மாற்றி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் எனவும் அதனை கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டதற்கு எத்தனை காரணங்களும், எவ்வளவு நியாயங்களும் இருந்தனவோ, அதைவிட அதிகமான காரணங்களும், நியாயங்களும் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியை தனி அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு உள்ளதாக தெரிவித்தார். மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரி, அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டால், மருத்துவ மாணவர்களுக்கான ஆண்டு கல்வி கட்டணம் ரூபாய் 5 லட்சம் குறையும் என்பது தான் மிகவும் முதன்மையான காரணமாக இருந்தது. ஆனால், வேளாண் கல்லூரியைப் பொறுத்தவரை கட்டணத்தையும் தாண்டி ஏராளமான காரணங்கள் உள்ளன. ஆதலால் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியை அரசு கல்லூரியாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.


Tags : Annamalai University College of Agriculture ,Ramadas ,Government College ,Ramadas Annamalai University College of Agriculture , Annamalai University, College of Agriculture, Government College, Ramadas Founder
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...