×

31 ஆயிரத்திற்கு கீழ் குறையவில்லையே!! :தங்கம் விலை பவுனுக்கு ரூ.31,288க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.31,288க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டு வருகிறது. அமெரிக்க டாலரின் விலையில் ஏற்படும் மாற்றமே சர்வதேச தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. அதை பொருத்து இங்கும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் அதன் விலையை பொறுத்து மாற்றத்துக்கு உள்ளாகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முழுக்க தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஒவ்வொரு நாளும் தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்தது.

இந்நிலையில், இன்று விலையேற்றம் மீண்டும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.13 குறைந்து ரூ.3,911க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.31,288க்கு விற்பனையாகிறது.  தங்கத்தின் விலைக்கு மாறாக வெள்ளியின் விலை இன்று சிறிதளவு உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.50.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ வெள்ளியின் விலை 50,000 ரூபாயிலிருந்து 400 ரூபாய் உயர்ந்து 50,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Gold, Price, Jewelry, Shaving, Silver, Sales, Gr
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...