×

தமிழகத்தின் முக்கிய துறைமுகமான சென்னை துறைமுகத்தில் 1,149 பணியிடங்கள் காலி: ஏற்றுமதி, இறக்குமதி பணிகளில் தேக்கம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் உள்ள 1,149 காலிபணியிடம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து துறையின் கீழ் இந்தியாவில் மொத்தம் 12 துறைமுக பொறுப்பு கழகங்கள் செயல்பட்டுவருகிறது. இந்த துறைமுகங்கள் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய், மேட்டார் உள்ளிட்டவைகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதைத்தவிர்த்து பயணிகள் போக்குவரத்தும் நடைபெற்றுவருகிறது. இந்த துறைமுகங்களை மேம்படுத்த சகார்மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்துவருகிறது. இந்த துறைமுகங்களில் உள்ள காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்ைக வைத்துவருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரங்கள் வெளியாகிவுள்ளது.

இதன்படி இந்தியாவில் உள்ள 11 முக்கிய துறைமுகங்களில் அனுமதிக்கப்பட்ட 35 ஆயிரத்து 534 பணியிடங்களில், 7 ஆயிரத்து 776 பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட 5106 பணியிடத்தில் 3957 பேர் மட்டுமே பணியாற்றிவருகின்றனர். 1149 இடங்களில் காலியாக உள்ளது. தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைகமுகத்தில் 463 பேர் பணியாற்றிவருகின்றனர். 481 இடங்கள் காலியாக உள்ளது. அதிக காலிப்பணியிடங்கள் உள்ள துறைமுகத்தில் பாரதீப் துறைமுகம் முதல் இடத்திலும், தீனதயாள் துறைமுகம் இரண்டாவது இடத்திலும், சென்னை துறைமுகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. காலியிடம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி ெசய்யும் பணிகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காலிபணியிடத்தை உடனே நிரப்ப ேவண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : workplaces ,port ,Chennai ,Tamil Nadu , Chennai Port, Workplaces Empty
× RELATED தமிழக பகுதியில் அத்துமீறி...