×

யானை- மனித மோதலை தடுக்க தமிழக அரசு புதிய திட்டம்

சென்னை: கோவையில் தொலை உணர்வு கருவிகள் மூலம் மனிதன்- யானை மோதல்களுக்கு தீர்வு ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்காக ரூ7.25 கோடி ரூபாய்  நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக கிராமங்களில் யானை-மனிதன் மோதல்கள் அதிகரித்து வருவதுடன், உயிரிழப்புகள் ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும் வனப்பகுதியில் மனித வாழ்விடங்கள் யானை புகுவதை கண்காணிப்பதற்காக,

செயற்கை நுண்ணறிவினைக் கொண்டு தொலைதூர கட்டுப்பாட்டு தெர்மல் கருவி, கண்காணிப்பு படப்பிடிப்புக் கருவி, யானை ரயில் பாதைகளில் வருவதை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையுடன் கூடிய முன்னெச்சரிக்கை அமைப்பு கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டில் முதற்கட்டமாக 13 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


Tags : Elephant-Human Conflict, Tamil Nadu Government, New Project
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...