×

நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த ஜாமியா மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ வெளியீடு: பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம்

புதுடெல்லி: நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்தாண்டு டிச. 15ம் தேதி, டெல்லியின் ஜாமியா  பல்கலைக்கழத்தின் அருகே குடியுரிமை (திருத்த) சட்டத்திற்கு எதிரான  ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர்  மீது கற்களை வீசி, பொது பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ  வைத்தனர். பின்னர் போலீசார் ஜாமியா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து,  கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.  வளாகத்திற்குள் போராட்டத்தின் போது தீ மற்றும் வன்முறையில் ஈடுபட்ட ஆட்களை  தேடும் போது, போலீசார் அங்குள்ள நூலகத்திற்குள் திடீரென நுழைந்தனர்.

அப்போது,  நூலக கட்டிடத்தில் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த பல மாணவர்களை,  போலீசார் லத்தியால் தாக்குதல் நடத்தினர். இவர்களில் 10க்கும் மேற்பட்ட போலீசாரும் முகமூடி அணிந்திருந்தனர். அதனால், அவர்கள் முக அடையாளங்கள் தெரியவில்லை. மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு  நாடு முழுவதும் கடும் கண்டனங்களை பலர் தெரிவித்த நிலையில், தற்போது மாணவர்களைத்  தாக்கியதாகக் கூறிய வீடியோ பதிவு வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவான ஜாமியா ஒருங்கிணைப்புக் குழு (ஜேசிசி) வெளியிட்டுள்ளது.

டிச. 15ல் நூலகத்தில் நடந்த சம்பவம் ெதாடர்பான சிசிடிவி காட்சிகள், ட்விட்டரில் டிரெண்டிங் ஆகிவருகிறது. போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலை பலரும் கண்டித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ இன்று சமூக ஊடகங்களில் வெளியான பின்னர், நெட்டிசன்கள் ட்விட்டரில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய டெல்லி போலீசாரே உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எனக்கேட்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கட்சி தலைவர்களும் போலீசாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : party leaders ,Jamia ,jail , Library, Jamia students, cops beat, video release
× RELATED தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக...