×

டெல்லியில் 3-வது முறையாக அரியணை ஏறுகிறது ஆம் ஆத்மி: முதல்வராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக 3-வது முறையாக பதவியேற்றார். டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பெய்ஜால், ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த வாரம் டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது.பாஜக வெறும் 7 இடங்களில் மட்டும் வென்றது அக்கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி 53.68% வாக்குகள் பெற்றுள்ளது. இதன் மூலம் மாபெரும் பெரும்பான்மையுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் டெல்லியின் முதல்வராகிறார். இதற்கிடையே, டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவி ஏற்பு விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.

இந்நிலையில் இன்று ராம்லீலா மைதானத்தில்  நடைபெற்ற விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார். கெஜ்ரிவாலுக்கு துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில்  பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Arvind Kejriwal ,CM , Delhi, Throne, Aam Aadmi, Arvind Kejriwal
× RELATED டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை...