×

‘ரஜினி மல... அஜித் தல...’: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ‘ரைமிங்’

விருதுநகர்: ரஜினிக்கு நிகர் அஜித் மட்டுமே. ரஜினி மல... அஜித் தல என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ரைமிங்காக பேசி கலகலப்பூட்டினார். விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு  போட்டி நேற்று நடந்தது. போட்டிகளை துவக்கி வைத்தபின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டி: இந்த பட்ஜெட் வரியில்லாத, பாதிக்காத, முத்தான பட்ஜெட். தவறான பொருளாதார கொள்கையால் வந்த பட்ஜெட் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர்  முதலில் பஞ்சாயத்து தலைவராக வந்து பஞ்சாயத்து பட்ஜெட் போட்டு சரியா  செய்கிறாரா என்பதை பார்த்துத்தான் அவரது கருத்தை ஏற்பதா, வேண்டாமா என முடிவு செய்ய  முடியும். ஆவின்பால் தனியார் லாரிகளுக்கு ஒப்பந்தம் முடிந்த நிலையில் வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக தொடர்ந்து பேசிவருகிறோம். விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என்றார்.

அப்போது நிருபர்கள், ‘‘நடிகர் ரஜினிக்கு இடையூறாக விஜய் வருவதால்தான் அவர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததாக கூறப்படுகிறதே’’ என்று கேட்டபோது, ``வருமான வரித்துறையினர் அதிமுகவினர் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்துகின்றனர். வருமான வரித்துறை தனி அமைப்பாக செயல்படுகிறது. அதில் அரசியல் கிடையாது. நடிகர் ரஜினிக்கு ஈக்குவலான(நிகரான) நடிகர்கள் யாரும் கிடையாது. ரஜினிக்கு நிகர் என்றால் அஜித் ஒரு ஆள் மட்டும் தான். ரஜினி மல, அஜித் தல’’  என ரைமிங்காக பேசி பேட்டியை முடித்தார் அமைச்சர். வீரருடன் குத்துச்சண்டை: விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென கிளவுஸ் அணிந்து களத்தில் குதித்தார். அங்கிருந்த வீரருடன் சிறிது நேரம் குத்துச்சண்டை ேபாட்டு  கலக்கினார். இதேபோல் கூடைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகளை ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று விளையாடி துவக்கி வைத்தார்.

Tags : Ajith Tala ,Rajendrapalaji ,Minister Rajendrapalaji , Rajini Mala, Ajith Tala, Minister Rajendrapalaji
× RELATED ரூ.3 கோடி மோசடி வழக்கில் தலைமறைவு...