×

பொய்யான தகவலை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத் மாநிலத் தலைவர் இப்ராகிம் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:  சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் மோடியையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழிவுபடுத்தியும், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு நபரை அடித்துக் கொலை செய்ததாகவும் பொய்யான செய்தியை பரப்பினர். இஸ்லாமிய மக்களை வன்முறை பாதைக்கு கொண்டு சென்ற அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசவிரோத சக்திகளின் வன்முறை போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

Tags : persons ,Office ,commissioner , People , who disseminate false information, action, complaint , commissioner's office
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...