×

தேசிய கேரம் தமிழகத்துக்கு வெண்கலம்

சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கேரம் போட்டியில் ஒட்டுமொத்த மாக அதிக வெற்றிகள் குவித்த வரிசையில், தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜலகானில் 48வது சீனியர் தேசிய மாநிலங்களுக்கு இடையிலான கேரம் போட்டி நடந்தது. இதில் மொத்தம்  29 மாநிலங்களை சேர்ந்த 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் பெண்கள், ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளிலும், மூத்த வீரர்கள் பிரிவுகளிலும் வீராங்கனைகள், வீரர்கள் பங்கேற்றனர். மூத்த வீரர்களுக்கான ஒற்றையர் பிரிவில், தமிழகத்தை சேர்ந்த ஏ.சுரேந்தர் பாபு 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அதுபோல், நிறைய போட்டிகளில் அதிகமான வெற்றிகள் குவித்ததின் அடிப்படையில், 3ம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய சுரேந்தர் பாபு உள்ளிட்ட தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  தமிழ்நாடு கேரம் சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : National Carrom National Carrom , National Carrom, Tamil Nadu, Bronze
× RELATED மறைந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு 100-வது...