×

பிப். 21ம் தேதி தாய்மொழி தினத்தை கொண்டாடுங்கள்: பல்கலை, கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

சென்னை: சர்வதேச தாய்மொழி தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் கொண்ட வேண்டும் என்று யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு யுஜிசி செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச தாய்மொழி தினத்தை பிரபலப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட நாளில் மொழிசார்ந்த கலாச்சார நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடத்தப்படும். அதன் அடிப்படையில் பிப்ரவரி 21ம் தேதி நாடு முழுவதும் தாய்மொழி தினத்தை கொண்டாடி தாய் மொழி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தாய் மொழி மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளை பேச, எழுத கற்றுக்கொள்வதற்கு மாணவர்களை ஊக்குவிக்கலாம்.

மொழி சார்ந்த கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு, மொழி சார் கலை பொருட்கள் உருவாக்குதல், விவாத நிகழ்ச்சி, கட்டுரை எழுதுதல், ஓவிய போட்டி, கண்காட்சி போன்றவற்றை நடத்தலாம். பல்கலைக்கழங்கள், பல்கலைக்கழங்களின்கீழ் இணைவு பெற்று செயல்படும் கல்லூரிகளில் பிப்ரவரி 21ம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட வேண்டும். சிவராத்திரியை முன்னிட்டு குறிப்பிட்ட நாள் விடுமுறையாக இருக்கும்பட்சத்தில், அதற்கு முந்தைய நாளோ அல்லது மறுநாளோ நிகழ்ச்சிகளை நடத்தலாம். தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது தொடர்பான அறிக்கையை தரவுகளை யுஜிசியின் கண்காணிப்பு பிரிவு இணையதளமான www.ugc.ac.in/uampல் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு யுஜிசி செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில கூறப்பட்டுள்ளது.

Tags : Mother's Day ,Pip ,universities ,colleges ,UGC Directive for Universities , Pip. On March 21, Mother's Day, celebrate, university, college, UGC directive
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!