×

காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

தண்டையார்பேட்டை: இடஒதுக்கீடு குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் ஓபிசி மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில ஓபிசி பிரிவு தலைவர் நவீன் மற்றும் எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், வல்ல பிரசாத் ஆகியோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அப்போது, வல்ல பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் தனது அரசியல் அமைப்பை பாஜ மூலம் கொண்டுவர முயற்சிக்கிறது.

அதன் விளைவாக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் பதிவேடு மற்றும் இந்த இடஒதுக்கீடு உரிமையை பறிக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகர வீரபாண்டியன், நாஞ்சில் பிரசாத், தீனா, ரங்கபாஷ்யம், ஏழுமலை, ராகுல்காந்தி, பி.வி.தமிழ்செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Congress Party Demonstration ,Demonstration ,Congress Party , Congress Party, Demonstration
× RELATED கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால்...