×

கேரள பாஜ தலைவராக சுரேந்திரன் நியமனம்

புதுடெல்லி: கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநில பாஜ தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கேரள மாநில பாஜ தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம், கேரளா, ம.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜ தலைவர் பதவி காலியாக உள்ளது. தமிழகத்தில் இப்பதவிக்காக பல்வேறு தலைவர்கள் தலைமையிடம் அடிபோட்டு வருகின்றனர். ஆனால், இதுவரையில் தமிழக பாஜ தலைவர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், கேரளா, மத்தியப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான பாஜ தலைவரை, அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று நியமித்தார். இதன்படி, கேரள பாஜ தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் பாஜ சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தினர். அதற்கான பரிசாக மாநில பாஜ தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய பிரதேச மாநில பாஜ தலைவராக விஷ்ணு தத் சர்மா, சிக்கிம் மாநில தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக பாஜ தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Surendran ,BJP ,Kerala , Kerala, BJP leader, Surendran, appointment
× RELATED கேரளாவில் கொரோனா வேகமாக பரவுகிறது:...