×

பள்ளி வேன் தீப்பிடித்து 4 குழந்தைகள் கருகி பலி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலம், சங்ரூர் மாவட்டத்தில் நேற்று மதியம் பள்ளி முடிந்து, 12 மாணவர்கள் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பள்ளி வேன் லோங்கோவால்-சித்சச்சார் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து 8 மாணவர்களை காப்பாற்றினர். இதில், 3 வயது மாணவி உள்பட 4 மாணவர்கள் உடல் கருகி பலியாயினர்.  இதனிடையே, பள்ளி முதல்வர், நிர்வாகம், வேன் ஓட்டுனர், உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ள்ளது. உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் அரசு தலா ₹5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. பழைய  வேனில், காஸ் இணைத்து ஓட்டியதே, வேன் தீப்பிடிக்க காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : School van fire ,School , School van, fire, 4 children, kills
× RELATED அயப்பாக்கத்தில் பதுக்கி வைத்து...