×

4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஹாலிவுட் சினிமா விஜய் படத்தின் ‘காப்பி’: வழக்கு தொடர தயாரிப்பாளர் தரப்பு முடிவு

சென்னை: 4 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘பாராசைட்’ என்ற படம் நடிகர் விஜய் படத்தின் ‘காப்பி’ என்று அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பட நிறுவனத்தின் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் 1999ம் ஆண்டு திரைக்கு வந்த மின்சார கண்ணா என்ற திரைப்படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கியிருந்தார். மோனிகா காஸ்டெலிேனா, ரம்பா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இப்படத்தை பார்த்து ஹாலிவுட் படம் தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. சமீபத்தில் அமெரிக்காவில்  வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதில் சிறந்த படம் உள்ளிட்ட 4 ஆஸ்கர் விருதை தென் கொரிய படம் ‘பாராசைட்’ பெற்றது. இப்படத்தை போங் ஜூன் ஹே இயக்கியிருந்தார். சாங் காங்க் கோ, லீ சன் கியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விஜய் நடித்த மின்சார கண்ணா படத்தை பார்த்து ‘காப்பி’ அடித்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் நெட்டில் தீயாக பரவியது. இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, ‘பாராசைட் படத்தை இன்னும் நான் பார்க்க வில்லை. நான் இயக்கிய மின்சார கண்ணா படத்தை பார்த்து இப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. பாராசைட் படம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கிறது என்று தெரியவந்ததும் நான் இயக்கிய மின்சார கண்ணா படத்துக்கும் அதன் டெக்னிஷியன் நடிகர் நடிகைகளுக்கு விருது கிடைத்ததுபோன்று உணர்ந்தேன். பாராசைட் படம் மீது வழக்கு தொடர்வீர்களா? என்கிறார்கள். இப்படத்துக்கான உரிமை பி.எல்.தேனப்பனிடம் உள்ளது; அவர்தான் இதுபற்றி முடிவு செய்ய வேண்டும்.’ என்றார். இதுகுறித்து தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தரப்பில் கூறுகையில், ‘பாராசைட் படம் மீது வழக்கு தொடரும் முன், சர்வதேச வழக்கறிஞர் ஒருவரிடம் பேச வேண்டியுள்ளது. அதன்பிறகு வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்’ என்றார்.

Tags : Producer Hollywood Cinema , Oscar Award, Hollywood Cinema, Vijay, Case
× RELATED ஆஸ்கர் படம் மீது வழக்கு எப்போது?