×

ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை பாலத்தில் விபத்துகளை தடுக்க விளக்குகள் கட்டாயம்: பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலை பாலத்தில் விபத்துகளை தடுக்க மின்விளக்குகள் கட்டாயம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒட்டன்சத்திரம், லெக்கையன்கோட்டை முதல் பொள்ளாச்சி வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்த இப்பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.ஒட்டன்சத்திரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக லெக்கையன்கோட்டை முதல் அரசப்பிள்ளைபட்டி வழியாக நான்கு வழிச்சாலை பழநி சாலையில் இணைகிறது. இச்சாலையின் வேடசந்தூர் சாலையில் ஒரு மேம்பாலமும், ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையி–்ல ஒரு மேம்பாலமும் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

இதில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் நான்கு வழிச்சாலைதான் பழநி, உடுமலை, பொள்ளாச்சி, கேரளா உள்பட பல்வேறு பகுதிகளுக்கு முக்கிய வழித்தடமாக அமையவுள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் இருபுற தடுப்புச்சுவற்றில் இதுவரை மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் மேலும் தாராபுரம் சாலை வழியாக உள்ள மேம்பாலம் முடியும் வழியில் ஒட்டன்சத்திரம் குறிஞ்சிநகர், காவேரியம்மாபட்டி, பழனிக்கவுண்டன்புதூர் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டார் இருசக்கர மற்றும் நான்கு சக்கரங்களில் தினமும் சென்று வருகின்றனர். இவர்கள் கடக்கும் இடத்தில் மின்விளக்குகள் அமைப்பது கட்டாயமாகும். இல்லாவிட்டால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் விபத்துகள் ஏற்படா வண்ணம் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் போதே தடுப்புச்சுவரில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : accidents ,road bridge ,Ottansapram-Dharapuram , Lighting obliged , prevent ,Ottansapram-Dharapuram ,Public demand
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி