×

மானாவாரி நிலங்களில் நவதானியங்கள் விதைப்பிற்கு ஆலோசனை வழங்கப்படுமா?: விவசாயிகள் எதிர்பார்ப்பு

தேவாரம்: கோம்பை மலையடிவாரத்தில் மானாவாரி நிலங்களில் நவதானியங்கள் விதைப்பிற்கு உரிய ஆலோசனையை வேளாண்மைத்துறை வழங்கிட முன்வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.  கோம்பை, பண்ணைப்புரம் மலையடிவாரத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிக ஏக்கர் பரப்பில் விளைந்தன. குறிப்பாக கடந்த 25 வருடங்களுக்கு முன்புவரை சுமார் 200 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் இதனை விளைவித்தனர். நவதானியங்களில் கம்பு, சோளம், கேழ்வரகு, திணை போன்றவை அதிகமானஅளவில் இங்கு விளைந்தன. மழை பெய்யும்போது இதன் உற்பத்தி பன்மடங்கு உயரும். எப்போதுமே விளைச்சல் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் 18ம் கால்வாய் திறக்கப்பட்டது.

கடந்த வருடம் தாமதமாக கிடைத்த மழையினால் விவசாயிகள் சோகம் அடைந்தனர். பெரியஅளவில் நவதானியங்கள் விதைக்கப்படவில்லை.  இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டுள்ளனர். இப்படியே தரிசாக கிடப்பதால் ஆண்டுதோறும் கிடைக்க கூடிய வேலை வாய்ப்புகளும் கிடைக்காமல் தொழிலாளர்கள் துயரத்தின் உச்சத்தில் உள்ளனர். கோம்பை மலையடிவாரத்தில் தோட்டங்களினாலும், காடுகளினாலும் வேலைகிடைக்காது என்ற நிலைமை உண்டாகி உள்ளது. இந்நிலையில் நவதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், இதனை எந்த காலங்களில் பயிரிட்டால் வளரும், என்பது பற்றியும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்கிடவேண்டும். தற்போது கோடைக்காலம் தொடங்கிட உள்ளது. இந்நிலையில் நவதானியங்களின் உற்பத்தியை அதிகரித்திட தேவையான நடவடிக்கையை தேவையான ஊக்குவிப்பு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளதால் உடனடியாக அதிகாரிகள் ஆலோசனை வழங்குவது அவசியம்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நவதானிய உற்பத்தி மாவட்ட அளவிலேயே சரிந்துவிட்டது. இதனை அதிகரித்திட தேவையான ஆலோசனைகளை வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேசவேண்டும் என்றனர்.

Tags : sowing , sowing,rainforests , rainforest, Farmers,expectation
× RELATED அரங்கம்